உழைப்பாளர் தினத்துக்கு முன்னதாக, பயிற்சி ஆசிரியர்களும் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்க (STTU) உறுப்பினர்களும் வெஸ்ட் கோஸ்ட் மற்றும் ஜூரோங்க குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஹமீது ரசாக் அவர்களுடன் கலந்துரையாடி, தமிழாசிரியர் தொழில்வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த உரையாடல் நிகழ்வில், ஆசிரியர்களின் அன்றாட அனுபவங்கள், கற்பித்தலில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தமிழ் மொழிக் கற்பித்தலை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.