top of page

2024

​சிங்கப்பூர்த்  தமிழாசிரியர்  சங்கத்தின் 2024-ஆம் ஆண்டு நடவடிக்கைகள்

2024-ஆம் ஆண்டின் தமிழ்மொழி விழாவையொட்டிச் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்களின் நினைவுக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.  இக்கருத்தரங்கு ஏப்ரல் 20-ஆம் தேதி சனிக்கிழமையன்று உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் வளர்தமிழ் இயக்கம், கல்வி அமைச்சின் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழு ஆகியவற்றின் ஆதரவில் நடைபெற்றது. 

‘ஆற்றலின் கருவறை – தமிழ் வகுப்பறை’ என்னும் கருப்பொருளில் அமைந்த இக்கருத்தரங்கின் நோக்கம் பேச்சுவழிக் கருத்துப்பரிமாற்றம், நடிப்பு, நாடகம் மற்றும் சமூக ஊடக உத்திமுறைகளைப் பயன்படுத்தித் தமிழ்மொழி கற்றல் கற்பித்தலை எவ்வாறு பயன்முனைப்புமிக்க வகையில் மேம்படுத்தலாம் என்பதாக அமைந்தது.

இவ்வாண்டின் கருத்தரங்கில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டவர் திரு. சீனுராமசாமி அவர்கள். இவர் ஓர் எழுத்தாளரும் கவிஞரும் தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் பெற்ற திரைப்பட இயக்குனருமாவார். 

தமிழர்களது பண்பாட்டு அடையாளங்களையும் கலாச்சாரச் சுவடுகளையும் அவற்றுள் படிந்துள்ள நமது விழுமியங்களையும் தம் திரைப்படங்களில் காட்சியமைப்பு, வசன உருவாக்கம் முதலியவற்றின்வழி சித்தரிக்கும் உத்திமுறைகளை திரு. சீனுராமசாமி கருத்தரங்கில் பகிர்ந்துகொண்டார். நம் வகுப்பறைகளில் மகிழ்வான கற்றல் கற்பித்தலுக்கு இந்த உத்திமுறைகள் வழிவகுக்கும் என்பதே இக்கருத்தரங்க ஏற்பாட்டுக்குழுவின் நம்பிக்கையாகும்.

மீடியோகார்ப் வசந்தம் ஒளிவழியின் தமிழ்ச்செய்திப்பிரிவு இந்நிகழ்வைப்பற்றிய செய்திக் காணொளியை ஒளிபரப்பியது. 

https://seithi.mediacorp.sg/watch/tairaaipapatanakala-valaiyaakata-tamaila-vakaupapaukalaaica-cauvaaracaiyamaanataakaka-mautaiyaumaa-727311

sttu _ tlf poster.jpg
image.png

கனடியத் தமிழ்ச்சங்கம், படிமுறைத்தமிழ் ஒன்றியம், உலகத் தமிழாசிரியர் பேரவை, வரலாற்று மற்றும் பண்பாட்டியல் துறை, டொரோன்டோ பல்கலைக்கழகம் ஸ்கார்பரோ ஆகியவை இணைந்து நடந்தும் 15-ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாடு கனடாவில் எதிர்வரும் ஜீன் மாதம் 1,2 மற்றும் 3 ஆம் தேதிகளில் டொரோன்டோ பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

தலைமுறை கடந்தும் தமிழர் வாழ்வியல்வழி கற்றல் கற்பித்தல் என்னும் கருப்பொருளில் மூன்று நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில்  உலக அளவில் பல்வேறு நாடுகளில் தமிழ் கற்றல் கற்பித்தலில் பயன்படுத்தப்படும் புதிய அணுகுமுறைகள், சிந்தனைகள், தகவல் தொழில்நுட்பத்தின் வழியாகக் கற்றல் கற்பித்தலில் உள்ள அணுகுமுறைகள் மற்றும் உலகத் தமிழாசிரியர்களின் தொடர்புகளை ஒருங்கிணைத்தல் ஆகியவை குறித்து ஆராயப்பட இருக்கின்றன.

 

உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேராளர்கள் கலந்துகொள்ள இருக்கிற இம்மாநாட்டில் சிங்கப்பூரில் இருந்தும் பல்வேறு பேராளர்கள் ஆய்வுக்கட்டுரைகளைப் படைக்க இருக்கிறார்கள். அதற்கான ஒருங்கிணைப்பு வேலைகளில் நமது சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் தனது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறது.

bottom of page