sttu.org.sg
sttu.org.sg
2020
சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் 2020-ஆம் ஆண்டு நடவடிக்கைகள்.
கேட்டல் கருத்தறிதல் தேர்வுக்கான வளங்கள் (தொடக்கநிலை, உயர்நிலை)
கேட்டல் கருத்தறிதல் தேர்வுக்கான வளங்கள் தொடக்கநிலைக்கும் உயர்நிலைக்கும் தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பும் நிலையில் வளங்கள் தயார்நிலையில் உள்ளன.
சுட்டி மயில் மாணவர் சஞ்சிகை
சுட்டி மயில் மாணவர் சஞ்சிகை ஜனவரி மாதம் முதல் ஆர்டர் செய்த பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றது. இதை ஆசிரியர்கள் மாணவர்களின் மொழித்திறன் வளர்சிக்கு உதவும் வகையில் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
சங்க உறுப்பினர்களுக்கான நினைவுப்பொருள் விநியோகம்
இவ்வாண்டு நம் சங்கம் உறுப்பினர்களுக்கான நினைவுப்பொருட்களை வழங்குவது என்று முடிவெடுத்தது. அதன்படி ஆசிரியர்கள் அன்றாடம் பயன்படுத்தும் வகையில் இரண்டு நினைவுப்பொருட்களைப் பள்ளிகளுக்கு அனுப்பிவைத்துள்ளது.
Heading 2
15.05.2020
உறுப்பினர்களுக்கு ஒரு கடிதம்
STTU - சந்திப்போம்; பேசுவோம்! (Virtual Dialogue Session), சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் அங்கம், 4 ஜூலை 2020
சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் உறுப்பினர்களின் நலனைப் பேணுவதிலும் உறுப்பினர்களின் அக்கறைக்குரிய அம்சங்களில் கவனம் செலுத்தி உறுப்பினர்களின் மேம்பாட்டை உறுதிப்படுத்துவதிலும் கடப்பாடு கொண்டு செயலாற்றி வருகிறது.
அவ்வகையில் Covid-19 கிருமிப் பரவலால் இப்போது நிலவும் அசாதாரண சூழலில் உறுப்பினர்களின் கருத்துகளையும் அக்கறைகளையும் அறிந்துகொள்ளும் வகையில் நிகர்நிலை கலந்துரையாடல் நிகழ்ச்சி (virtual dialogue session) ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது. இக்கலந்துரையாடல் ஆசிரியர்கள் அனைவரும் மனம்விட்டுப் பேசுவதற்கான வாய்ப்பை வழங்கிய ஒரு தளமாக அமைந்தது.
சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பகிர்வரங்குகள், ஆகஸ்டு 2020
பகிர்வரங்கம் 1 : 15 ஆகஸ்டு 2020 (சனிக்கிழமை)
நேரம் : காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
பகிர்வு 1 - சிங்கப்பூர் கற்பித்தல் முறைமையின் வழி (STP) முன்னுணர்வுக் கருத்தறிதலைக் கற்பித்தல்.
பகிர்பவர் : திரு. அந்தோணி ராஜ் ஜோசஃப், சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி.
சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர் திரு அந்தோணி ராஜ் ஜோசப் அவர்களால் இப்பகிர்வில் சிங்கப்பூர் கற்றல் முறைமையிலுள்ள கற்றல் கூறுகளை ஆசிரியர்கள் எவ்வகைகளில் தங்கள் வகுப்பறைக் கற்றல் கற்பித்தலில் பயன்படுத்துவது என்பது குறித்து பகிர்ந்துகொள்ளப்பட்டது. எண்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பகிர்வில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
பகிர்வரங்கம் 1 : 15 ஆகஸ்டு 2020 (சனிக்கிழமை)
நேரம் : காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
பகிர்வு 2 - ஓபெல் (Opal 2.0) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கற்றல் மற்றும் கற்பித்தலில் புதுமையும் புத்தாக்கமும்.
பகிர்பவர் : திரு லூயிஸ் ஐசக் குமார், பார்ட்லி உயர்நிலைப் பள்ளி
பார்ட்லி உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர் திரு லூயிஸ் ஐசக் குமார் அவர்களின் பகிர்வில், ஆசிரியர்கள் மேம்படுத்தப்பட்ட OPAL2.0 தளத்தை எவ்வாறு தங்கள் பணித்திறன் மேம்பாட்டிற்குப் பயன்படுத்திக்கொள்வது என்றும், OPAL2.0 தளத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்தும் தெரிந்துகொண்டார்கள். மேலும், இந்தத் தளத்தைப் பயன்படுத்தி எவ்வாறு தங்கள் கற்றல் கற்பித்தல் வளங்களைப் பள்ளி, குழுமம் மற்றும் தேசிய அளவில் தமிழ் ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொள்ளவது என்றும் தெரிந்துகொண்டனர்.
பகிர்வரங்கம் 2 : 22 ஆகஸ்டு 2020 (சனிக்கிழமை)
நேரம் : காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
கல்விப் பயணம் – வெற்றிப் பாதையில்
பகிர்பவர் : திரு. சிவராஜன், பள்ளி முதல்வர்
தெக் வாய் உயர்நிலைப் பள்ளி
மேற்கண்ட மெய்நிகர் பகிர்வில் 63 ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். பள்ளி முதல்வர் திரு. சிவராஜன் தம் பகிர்வில் ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தலில் எவ்வாறெல்லாம் சிறப்புறத் திகழலாம் என்பதற்கான எடுத்துக்காட்டுகளைத் தம் வாழ்க்கை அனுபவத்தின் வாயிலாக விளக்கிக் கூறினார்.
பகிர்வரங்கின் நிறைவுரையை நிகழ்த்திய சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் உதவித் தலைவர் Dr. P சசிகுமார், திரு. சிவராஜனின் கருத்துகள் ஆசிரியர்கள் தங்கள் பணித்திறன்களிலும் கற்றல் கற்பித்தலிலும் முன்னேற்றம் அடைவதற்கு ஊக்கமூட்டுபவையாக அமைந்திருந்தன என்று குறிப்பிட்டார். பயனுள்ள பல ஆலோசனை-களையும் வழிகாட்டுதல்களையும் வழங்கிய திரு. சிவராஜனுக்குத் தமிழாசிரியர் சங்கத்தின் சார்பில் Dr. சசிகுமார் நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்துக்கொண்டார்.
7-ஆம் மூவாண்டுப் பொதுக்கூட்டம்
மதிப்புக்குரிய உறுப்பினர்களே, வணக்கம்.
நமது சங்கத்தின் 7-ஆம் மூவாண்டுப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை, 26-09-2020-ஆம் நாளன்று நடைபெற்றது.
அது தொடர்பான விவரங்களை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருக்கிறோம்.
பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு நல்லாதரவு நல்ககிய உறுப்பினர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
தமிழ்மொழி விழா 2020