top of page
Anchor 3

2016 சங்க நிகழ்வுகள்

EnglishCommMar14

தமிழவேள் நினைவுக் கருத்ததரங்கம் - ஏப்ரல் 2016

 

ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக நம் சங்கம், 23.04.16ஆம் நாளன்று 'சிங்கப்பூரில் பேச்சுத்தமிழைக் கட்டிக் காத்தல்' என்னும் கருப்பொருளில் தமிழவேள் நினைவுக் கருத்தரங்கத்தை நடத்தியது.  ஜொகூர் பாருவில் இயங்கிவரும் தெமெங்கொங் இபுராகிம் ஆசிரியர் கல்விக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் முதுநிலை விரிவுரைஞராகவும் பணியாற்றிவரும் திரு. ரா. சேதுபதி அவர்கள் கருத்தரங்கத்தில் முதன்மையுரை நிகழ்த்தினார்.  அதையடுத்து நடைபெற்ற கலந்துரையாடலின்​போது (Panel Forum) நம் நாட்டில் பேச்சுத் தமிழைக் கட்டிக் காப்பதில் நாம் எதிர்நோக்கும் சவால்கள் யாவை, அவற்றைச் சமாளிக்கத் தமிழாசிரியர்கள் எத்தகைய கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகளைப் பயன்படுத்தலாம் ஆகியவை தொடர்பான பல கருத்துகள் பகிர்ந்துகொள்ளபட்டன. 

Thamizhavel Seminar 2016
திரு.  ரா.  சேதுபதி
சிதஆச அவசரப் பொதுக்கூட்டம் -  ​ ஆகஸ்ட் 2016
EGM Oct '16

நம் சங்கச் செயற்குழுவின் அழைப்பையேற்று, 13.08.2016 அன்று நடைபெற்ற அவசரப் பொதுக்கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.  

​அக்கூகூட்டத்தில் நம் சங்கத் தலைவர் திரு. சி. சாமிக்கண்ணு ஆற்றிய உரையின் சுருக்கம் : 

"வாங்கிய விலையைவிட தற்போது நமக்கு மூன்று மடங்கு பெற்றுத்தரக்கூடிய நம் சங்கத்தின் தற்போதைய கட்டடத்தை  விற்பதன் மூ​லம் ஈட்டும் தொகையைக் கொண்டு,  சங்கத்தின் பொருளாதார மேன்மைக்காகாகவும் உறுப்பினர்களின் நலனுக்காகவும்  பயன்படுத்துவதற்காக   விவேகமான முறையில் முதலீடு செய்ய செயலவை எண்ணியுள்ளது. அத்தொகையைப் பயன்படுத்திச் சங்கத்தின் கடன்களையெல்லாம் முழுமையாக அடைத்துவிட்டு இரண்டு சிறிய மனைகளை (properties) வாங்கத் திட்டமிட்டுள்ளது. ஒரு மனையைச் சங்க அலுவலகமாகவும் மற்றொரு மனையை   வாடகைக்கு விடவும் திட்டம் உள்ளது. மிச்சம் இருக்கக்கூடிய சுமார் $300,000-ஐ  சங்க உறுப்பினர்களின் நலனுக்கும், திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கும், சங்கத்தின் நிர்வாகச் செலவுகளுக்கும் பயன்படுத்த செயலவை திட்டமிட்டிருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவை நாடுகிறோம்."  

​கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்களில் பெரும்பான்​மையோரின் (98%) வாக்களிப்பின்படி பின்வரும் தீர்மானம் ஏற்றுக்கொாள்ளப்பட்டது.

RESOLUTION TO APPROVE SALE OF STTU BUILDING AND PURCHASE OF OTHER PROPERTIES FROM THE PROCEEDS OF THE SALE

 

That this Extra-ordinary General Meeting held on 13.08.2016, pursuant to Rules 21, 22, 23, 27 and 28 of the Constitution of the Union hereby resolves that the Executive Council of the Union be authorised as follows:

 

  1. to sell the STTU Building located at 394, Race Course Road S(218649), to the highest bidder in an Open Tender Exercise, to be conducted before the next Triennial General Meeting;

 

  1. to use the funds raised from the sale of the STTU Building to purchase 2 other properties (one for use as the union's office and the other for investment purposes), after settling all of the Union’s outstanding loans. The funds raised from the sale of the STTU Building shall be used to cover the purchase price of the 2 properties and all related expenses such as legal fees, stamp duties and renovation cost for the said properties. Any amount remaining will be held in the Union’s bank accounts and used by the Executive Council for the Union’s operational expenses; and

 

  1. to make any further changes as necessary to give effect to the above or as directed by the Registrar of Trade Unions.

கலந்தாய்வரங்கம் : 
சிங்கப்பூரில் தமிழ்மொழிக் கல்வி - ​நேற்று, இன்று, நாளை'   - அக்டோபர் 2016
TL Education Symposium 2016

பேராசிரியர் கோபிநாதனின் ‘சிங்கப்பூரில் கல்விக்கொள்கையும் நடைமுறையும்’ என்னும் தலைப்பிலான நூல் ஏப்ரல் திங்கள் 2014-இல் வெளியீடு கண்டது. அதனைத் தொடர்ந்து, ஆய்வாளரும் கல்வியாளருமான பேராசிரியர் அருண் மகிழ்நன் அவர்கள் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர் திரு. சி. சாமிக்கண்ணுவிடம் அந்நூலின் உள்ளடக்கம் பற்றிய கருத்தாடல் தமிழாசிரியர்களுக்கிடையே  நடைபெறுவதற்கான களத்தைச் சங்கம் அமைத்துக் கொடுத்தால் தமிழாசிரியர்கள் தாய்மொழிக் கொள்கைகள் பற்றிய விழிப்புணர்வைப் பெறுவதோடு சிங்கப்பூரில் தமிழ்மொழிக் கல்வியின் நிலை குறித்த ஆழமான விவாதங்களிலும் ஈடுபட முடியும் என்று யோசனை தெரிவித்தார்.          திரு. சாமிக்கண்ணு அதனைச் செயல்படுத்த முன்வந்ததன் விளைவாக தமிழாசிரியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் சனிக்கிழமை, 15-10-2016 அன்று 'சிங்கப்பூரில் தமிழ்மொழிக் கல்வி - ​நேற்று, இன்று, நாளை' என்னும் கருப்பொருளில் கலந்தாய்வரங்கம் சிறப்பாக நடந்தேறியது. இந்தக் கலந்தாய்வரங்கில் சுமார் 80 ஆசிரியர்களும் கல்வியாளர்களும் கலந்துகொண்டனர்.

 

இந்த ஆய்வரங்கில் பேராசிரியர் எஸ் கோபிநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு துவக்க உரையாற்றினார். கல்வியியல் துறையில் 40 ஆண்டுகளுக்கு மேல் பெற்ற ஆழ்ந்த அனுபவ அறிவும், தொலைநோக்குச் சிந்தனையாற்றலும் கொண்ட  பேராசிரியர் கோபிநாதனின்  கருத்துகள்  நிகழ்வில் கலந்துகொண்ட ஒவ்வொருவரின் சிந்தனைக்கும் விருந்தாக அமைந்தன. தொடர்ந்து தமிழாசிரியர்கள் அறுவர் 3 ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்தனர்.  பின்னர்  அதையொட்டிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. முனைவர் க.ஷண்முகம் கலந்துரையாடலின் நெறியாளராக இருந்து வழிநடத்தினார். அப்​போது  நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள் ப​டைப்பாளர்களிடம் கேள்விகள் கேட்டு தங்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர். கலந்தாய்வரங்கில் படைக்கப்பட்ட கட்டுரைகளின்​ தொகுப்பான ஆய்வடங்கலின் மின்னிலக்கப் படிவத்தைப் இந்த இணைப்பிலிருந்து நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

 

http://www.sttu.org.sg/--publications 

​கட்டுரை  படைக்கும்
தொடக்கப்  பள்ளி ஆசிரியர்கள்
கலந்துரையாடலின்போபோது     ஆசிரியர்  ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கிகிறார்     பேராசிரியர் கோபிநாதன்.
​கலந்தாய்வரங்கத்தில் கட்டுரை படைத்த ஆசிரியர்களுடன்  மதியுரைஞர்களும்  ஏற்பாட்டுக் குழுவினரும்.
bottom of page