

sttu.org.sg
sttu.org.sg



2023
சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் 2023-ஆம் ஆண்டு நடவடிக்கைகள்.
23 செப்டம்பர் 2023-ஆம் நாள் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் மூவாண்டுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அடுத்த மூன்றாடுகளுக்கான பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட புதிய செயலவைக்கு வாழ்த்துகள்!
மூவாண்டுப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தொடர்ந்து பயணிப்போம். நம் பயணம் இனிதாகட்டும்.
ஆசிரியர் தின விருந்து

23 செப்டம்பர் 2023-ஆம் நாள் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் ஆசிரியர் தின விருந்து நடைபெற்றது. நம் அதிபர் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த விருந்து நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், சமூகத் தலைவர்கள், கல்வி அமைச்சின் அதிகாரிகள், தொழிற்சங்க நண்பர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். உங்களின் அமோக ஆதரவின்றி இது சாத்தியமாகியிருக்காது.
இந்த அமோக ஆதரவிற்கு உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.