top of page

2021

​சிங்கப்பூர்த்  தமிழாசிரியர்  சங்கத்தின்  2021-ஆம் ஆண்டு நடவடிக்கைகள்.

 

தமிழ் கற்பித்தலில் சிறுகதை - படிப்பும் படைப்பும்

2021-ஆம் ஆண்டின் தமிழ்மொழி விழாவை முன்னிட்டு நம் சங்கத்தின் பங்களிப்பாக இவ்வாண்டுக்கான தமிழவேள் கோ.சாரங்கபாணி நினைவுச் சொற்பொழிவை மெய்நிகர் நிகழ்வாக 10.04.21, சனிக்கிழமையன்று நடத்தினோம்.   நிகழ்வின் சிறப்புப் பேச்சாளரான முனைவர் கு.ஞானசம்பந்தன் மாணவர்களின் கற்பனைத் திறனைத் தூண்டவும் படைப்பாற்றலை வளர்க்கவும் சிறுகதைகள் எவ்வாறு உதவுகின்றன என்பதைப் பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார்.  சுமார் 250 ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோரும் இம்மெய்நிகர் நிகழ்வில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.  

TM article.jpg
Shortstories Lecture_TLF '21.jpg

தமிழ் முரசு, 11.04.21

இந்தியா கோவிட்-19 நிவாரணப் பணிகளுக்காக  நிதித் திரட்டு

இந்தியா கோவிட்-19 நிவாரணப் பணிகளுக்காக  நம் சங்கம் நடத்திய நிதித் திரட்டு 27.05.21 தேதியன்று நிறைவுபெற்றது.  

 

நம் சங்க உறுப்பினர்கள்  பலரும்  அன்புடன் வழங்கிய நன்கொடைத் தொகையான மொத்தம் $14,080/-  வெள்ளியை நன்றியுடன் பெற்றுக்கொண்டோம்.  

 

மேற்குறிப்பிட்ட  தொகைக்கான நம் சங்கத்தின்  காசோலையை  சிங்கப்பூர்ச் செஞ்சிலுவை சங்கத்திற்கு வழங்கியிருக்கிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.  நல்லாதரவு வழங்கிய தோழர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!

தமிழ்க் கருத்தரங்கச் சிறப்புரை

தேசியக் கல்விக்கழகத் தமிழ்மொழி, பண்பாட்டுத் துறையின் ஏற்பாட்டில் நடந்தேறிய இந்தத் ‘தமிழ்க் கருத்தரங்கச் சிறப்புரை’ சிங்கப்பூர்த் தமிழ்க் கல்வியின் தொடக்கம், அதன் வளர்ச்சிப் போக்கு, தமிழ்க் கல்வியின் இன்றைய நிலை ஆகியவற்றை விவரிக்கும் வகையில் அமைந்திருந்தது.

70-ஆண்டுகால நிறைவைக் கொண்டாடியுள்ள தேசியக் கல்விக்கழகத்தின் வரலாற்றுப் பாதையும் வளர்ச்சிப் போக்கும் குறித்து இப்படைப்பு விளக்கிக் கூறியது.

1951-இல் தோற்றம் கண்ட சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், தமிழ்மொழி வளர்ச்சிக்கும் தமிழ்க் கல்வி மேம்பாட்டிற்கும் தமிழாசிரியர்களின் பணிமேம்பாட்டிற்கும் ஆற்றிய பங்கு, இவ்வுரையில் முதன்மையிடம் பெற்றது.

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் மூத்த ஆலோசகரும் உலகத் தமிழாசிரியர் பேரவையின் தலைவருமான திரு. சி.சாமிக்கண்ணு அவர்கள் ஆற்றிய சிறப்புரை, சிங்கப்பூர்க் கல்வியாளர்களுக்கும் வருங்காலச் சிங்கப்பூர்த் தமிழாசிரியர்களுக்கும் சிங்கப்பூர்த் தமிழ்க்கல்வி வரலாற்றைப் பற்றிய ஒரு பருந்துப் பார்வையை வழங்கியதோடு விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.

NIE SS Seminar_'21.jpg
MITT '21_2.jpg
Anchor 1
MITT '21_1.jpg
MITT '21_3.jpg
bottom of page