top of page
Anchor 3

2014 சங்க நிகழ்வுகள்

EnglishCommMar14

'ஆங்கில ​மொழியில் கருத்துப் பரிமாற்றம்' - பயிற்சி வகுப்பு 22/3/14, சனிக்கிழமையன்று தொடங்கி  10 வாரங்கள் தொடர்ந்து  நடைபெற்றது. வகுப்பில் சங்க உறுப்பினர்கள் 19 பேர் கலந்துகொண்டனர். 

 

பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டவர்கள் அனைவரும்  நம் சங்கம் மேலும் விரிவான முறையில் இந்தத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியைத் தொடர்ந்து  நடத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

 

அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 3 நிலைகளில் ஆங்கில மொழி வகுப்புகளை நடத்த நம் சங்கம் முடிவு செய்துள்ளது.  இது தொடர்பான விவரங்கள்  விரைவில் அறிவிக்கப்படும்.  

TGM 2014

26/7/2014, சனிக்கிழமையன்று சிறந்த முறையில் நடந்தேறிய நம் சங்கத்தின் 5ஆம் மூவாண்டுப் பொதுக்கூட்டத்தில் 78 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

   

செயலாளரின் வரவேற்புரை,  தலைவர் உரை ஆகியவற்றுடன் தொடங்கிய பொதுக்கூட்டத்தில், போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட   சங்கச் செயற்குழுவினர் 15 பேரும் அறிமுகப்படுத்தப்பட்டனர். 

பொதுக்கூட்டத்தில் 5 சட்டத் திருத்தங்களும் 2 தீர்மானங்களும் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன.  சங்கச் செயலவையின் நிர்வாகத் திறனை மேம்படுத்தவும் சங்கத்தின் நிதி நிலை மேம்படவும் இது பேருதுவியாக இருக்கும்.  

 

 

 

PG Tribute - Oct '14

முன்னோடித் தலைமுறைத் தமிழாசிரியர்களைச் சிறப்பித்தல்

 

முன்னோடித் தலைமுறையினரின் உழைப்பும் தியாகமும் அர்ப்பணிப்பும் இன்றைய சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும் வளப்பத்திற்கும் அடிப்படையாக  இருந்துள்ளன. அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவர்களைக் கௌரவப்படுத்திக் கொண்டிருக்கிறது.

 

சிங்கப்பூர்ப் பள்ளிகளில் வளங்களும் வாய்ப்புகளும் இன்றைவிட குறைவாக இருந்த காலத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் தமிழ்மொழியையும் தமிழ் மாணவர்களையும்  அரவணைத்து வளர்த்த முன்னோடித் தலைமுறைத் தமிழாசிரியர்களை, கடந்த 11/10/2014-ஆம் நாளன்று, ஆர்க்கிட் கன்ட்ரி கிளப்பில் விழா எடுத்துச் சிறப்பித்தது சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம்.

 

வயது முதிர்ந்த நிலையிலும் உற்சாகம் பொங்க 65 முன்னோடித் தமிழாசிரியர்கள் விழாவில் பங்கேற்றனர். நீண்ட இடைவளிக்குப் பின்னர் தங்கள் நண்பர்களைச் சந்தித்ததாலும் தமிழ்மொழிக் கல்விக்கான தங்கள் பங்களிப்புக்காகச் சிறப்பிக்கப்பட்டதாலும் உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் அவர்கள் திளைத்திருந்தனர்.

 

முன்னோடித் தமிழாசிரியர்களின் குடும்பத்தினர், தமிழாசிரியர் சங்க உறுப்பினர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.  இந்நிகழ்வில் சட்ட, வெளியுறவு அமைச்சர் திரு. கா.சண்முகம் சிறப்பு விருந்தினராகப் கலந்துகொண்டு முன்னோடித் தமிழாசிரியர்களின் பங்களிப்பைப் போற்றி அவர்களுக்கு  நினைவுப்பொருள் வழங்கினார்.

அமைச்சர் திரு. கா.சண்முகம்

சிறப்புரை

திரு. கோ. பெருமாள், 1951-இல் நம் சங்கத்தை நிறுவிய முன்னோடிகளில் ஒருவர். 

முன்னோடித் தமிழாசிரியர் திருமதி  கிருஷ்ணவேணி 

நம் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு. மில்டன் சைமன் ராஜ்

முன்னோடித் தமிழாசிரியர்

திருமதி சரஸ்வதி துரைசாமி

'முன்னேறு வாலிபா' பாடலை நாட்டுக்கு அர்ப்பணித்த

திரு. சூசை ஜேசுதாசன் 

இவ்வாண்டில்  இனி  நடைபெறவிருக்கும்  முக்கிய நிகழ்வு

சிதஆச, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகப் பயிற்சி வகுப்பு.

       

சிங்கப்பூர்த்  தமிழாசிரியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் எதிர்வரும்  7/12/2014  முதல்  14/12/2014  வரை, தஞ்சாவூரில்,  நடைபெறவிருக்கும் கல்வி, பண்பாட்டு முகாம்  தொடர்பான விவரங்களைப் பள்ளிகளுக்கும் உறப்பினர்களுக்கும்   அனுப்பியிருந்தோம்.   

 

தஞ்சாவூர்,  தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச்  சேர்ந்த நிபுணர்கள் பயிற்சி வகுப்புகளை நடத்துவார்கள்.  

 

தமிழாசிரியர்களின் திறன் மேம்பாட்டுக்காக நம் சங்கம் தொடர்ந்து மேற்கொண்டுவரும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.  

bottom of page