Skip to main content

STTU

STTU’s Milestone

1950s
August 1, 1951
1951

1951 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் அதிகாரபூர்வமாகத் துவக்கம் கண்டது.

1951 - இல் தமிழாசிரியர் சங்கத்தைத்
தோற்றுவித்த நம் முன்னோடிகள்.

1956
1956

1956 - இல் நம் சங்கம் ஆங்கிலப் பள்ளிகளில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு இணையான சம்பளத்தைத் தமிழாசிரியர்களுக்குப் பெற்றுத் தந்தது

1960s
1964
1964

1964 - மலேசியா (ஜொகூர்பாரு)  சென்று  ஆசிரியர் பயிற்சி பெற்று வந்த தமிழாசிரியர்களுக்கு நம் சங்கத்தின் முயற்சியால்   ஆண்டிலிருந்து   தரமான தமிழாசிரியர்  பயிற்சியைச் சிங்கப்பூரிலே வழங்க கல்வி அமைச்சு ஏற்பாடு செய்தது.

1964-இல் உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலை 4 முடித்த மாணவர்கள்  வெளிவரத்  தொடங்கிய பிறகுதான் தமிழாசிரியர்கள் பெரும்பாலோர் உயர்நிலைக்கல்வி பயின்றவர்கள் என்ற நிலை ஏற்பட்டது. இவர்களின் வருகையால் தமிழாசிரியர்களின் தகுதியும் தரமும் உயர்ந்தது. உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியிலிருந்து வெளிவந்த மாணவர்களின் வருகை சிங்கப்பூர் தமிழ்க் கல்வி வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.  

 

1968
1968

1968 -ஆம் ஆண்டு தமிழ்க் கல்வியின் தரத்தை உயர்த்தவேண்டும் என்ற சங்கத்தின் வேண்டுகோளின்படி தமிழகத்திலிருந்து இரண்டு பேராசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர்.

1970s
1971
1971

1971-ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியுடனும் கல்வி அமைச்சுடனும் இணைந்து முதல் தமிழ் கற்றல், கற்பித்தல் ஆய்வரங்கு ஒன்றைச் சங்கம் நடத்தியது.

1976
1976

1976 - கல்வி அமைச்சில் தமிழ்ப் பகுதிக்குக் கல்வி அதிகாரிகளாகத் தமிழாசிரியர்களே நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைக் கல்வி அமைச்சு 1976ஆம் ஆண்டு நிறைவேற்றியது.

1980s
September 26, 1983
1983

1983 -ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 26-ஆம் நாளில் வெளியிடப்பட்ட கல்வி அமைச்சின் அறிவிப்பின்படி, 13 எழுத்துகள் குறித்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் சிங்கப்பூர்ப் பள்ளிகளில் நடப்புக்கு வந்தது. 

1985
1985

1985 - ஆம் ஆண்டு முதல் தமிழாசிரியர்கள் தமிழ்நாடு சென்று, தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற ஏற்பாடு செய்யப்பட்டது.

1986
1986

1986 - இல் தமிழாசிரியர் சங்கப் பணிமனை (சிராங்கூன் பிலாசா) திறப்புவிழா.

1990s
1991
1991

1991-ஆம் ஆண்டில் தமிழாசிரியர்களின் கணினி அறிவை வளர்க்கப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. ‘பாரதி’ என்னும் மென்பொருள் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

1991-ஆம்ஆண்டில் சிங்கப்பூர்த் தொலைத் தொடர்பு வாரியத்துடன் இணைந்து, உலகில் முதல், Teleview - ‘ஸ்மார்ட்’ என்னும் மின்னியல் தமிழ்ப்பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.  

1992
1992

1992 ஆம் ஆண்டு நம் சங்கம், முதலாம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டை சிங்கப்பூரில் சிறப்பாக நடத்திச் சாதனை படைத்தது. இதுவரை,  நம் சங்கத்தின் ஆதரவோடு,  பல்வேறு நாடுகளில்  மாநாடுகள் நடைபெற்றுவருகின்றன.  

1994
1994

1994 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்களோடு (மதுரை, தஞ்சாவூர்) இணைந்து பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டன. புதுவை மொழியியல் நிறுவனத்துடன் இணைந்தும் ஆசிரியர் பணியிணைப்புத் திட்டம் நடத்தப்பட்டது.   இதுபோன்ற  திட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் கடந்த 26 (1992 முதல்) ஆண்டுகளாகத் தொடக்க உயர்நிலை மாணவர்களுக்குத் தமிழ்த் துணைப்பாட வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

2000s
2006
2006

2006 - இல் தமிழாசிரியர் மாளிகையை வாங்கியது

March 6, 2010
2010

2010 - ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி தமிழாசிரியர் மாளிகை திறப்பு விழா கண்டது.

2011
2011

2011 - ஆம் ஆண்டு 9-ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டை சிங்கப்பூரில் சிறப்பாக நடத்தியது

2018
2018

2018 - ஆம் ஆண்டில, சிம் லிம் டவர், சிட்ரான் கடைத்தொகுதி ஆகியவற்றில் மூன்று மனைகளை வாங்கியது

2018 - ஆம் ஆண்டில் 12-ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டை சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தியது.  

தமிழாசிரியர்களின் நலன், திறன் மேம்பாடு, கல்வி கொள்கைகள் மற்றும் தமிழ்மொழி, தமிழ்க்கல்விக்கு அக்கறைக்குரியவை ஆகியவற்றைப் பற்றி கருத்துரைப்பதோடு குறைகளைக் களைய ஆவன செய்வதைச் சங்கம் முக்கியப் பணியாகக் கொண்டு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.

2022
2022

கல்வி உதவி நிதி 2022 — அழகப்பா கல்வி நிலைய முன்னாள் மாணவர் குழு, சிங்கப்பூர் (STTU) சார்பாக மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது.