மாணவர்களே இந்த ஆசிரியர்களின் முன்னுரிமை

கல்வியைவிட மனிதநேயம் மாணவர்களுக்கு முதலில் இன்றைய கல்வி சூழலில், மாணவர்களின் மனநிலை, திறன் மற்றும் எதிர்கால வளர்ச்சியை முன்னிலைப்படுத்தும் ஆசிரியர்கள் சமுதாயத்தில் முக்கிய பங்காற்றுகின்றனர். குறிப்பாக கல்லூரி மற்றும் பள்ளி மட்டங்களில் மாணவர்களுடன் நெருக்கமாக இணைந்து செயல்படும் ஆசிரியர்கள், கல்வியை மட்டும் அல்லாது வாழ்க்கை மதிப்புகளையும் கற்பித்து வருகின்றனர். கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் புத்தக அறிவை மட்டுமின்றி தொழில்நுட்ப திறன்கள், குழு பண்பு, தொடர்பு திறன் மற்றும் சமூக பொறுப்பு ஆகியவற்றையும் கற்றுக்கொள்வது அவசியமாகியுள்ளது. இதற்காக பல […]
அரும்பணிக்கு அங்கீகாரம்

“தொன்மொழியாசிரியர்கள் முதல் இணைய குன்றா இன்மொழியம் செய்த நாளும் தடைதேடோல், செழிப்புற்று வாழும் மொழியாக நம் தமிழை பண்பால் காக்காத் தீவட்டும் தமிழாசிரியர்களே! அப்படிப்பணியில் அரும்பணியாற்றினோரை, ஆற்றி வருவோரை சிறப்பிக்கும் விதமாக ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.” பா. பாலசுப்பிரமணியம் | சிறப்பு நிருபர் கோவிட்-19 கட்டுப்பாடுகள் நடுவிலும் ஆசிரியர் சமுதாயம் தங்கள் தொண்டை தளரவிடவில்லை. இணைய வழிப் பாடம், குறுஞ்செய்தி மூலம் தொடர்பு, பெற்றோர்களுக்கு உதவி என பல்வேறு வழிகளில் மாணவர்களை அணுகி, அவர்களின் […]
தமிழ்மொழி கல்விக்காக அர்ப்பணித்த வாழ்வு

தலைப்பு யோசனைகள் கல்விக்காக அர்ப்பணித்த வாழ்க்கை தமிழ் கல்வியின் பெருமைமிகு பயணம் தலைமுறைகளை உருவாக்கிய ஆசிரியர்கள் மாணவர்களின் மனதில் நிலைத்த ஆசிரியர்கள் தமிழ் மொழிக்காக வாழ்ந்த கல்வியாளர்கள் உள்ளடக்க பதிவு பல தசாப்தங்களாக தமிழ் கல்வித்துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இந்த மூத்த ஆசிரியர்கள், ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் அழியாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் வழங்கிய கல்வி, ஒழுக்கம் மற்றும் வழிகாட்டுதல் பல தலைமுறைகளின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைந்துள்ளது. பாடப்புத்தக அறிவை மட்டுமல்லாமல், நல்ல மதிப்புகள், தன்னம்பிக்கை மற்றும் […]
தமிழ் மொழிக் கல்விக்குப் புதுமை சேர்த்த ஆசிரியர்களுக்கு பாராட்டு

தமிழ் மொழிக் கல்விக்குப் புதுமை சேர்த்த ஆசிரியர்களுக்கு பாராட்டு தமிழ் மொழிக் கல்வித் துறையில் சிறப்பாகப் பணியாற்றி மாணவர்களின் வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்களிப்பு செய்த ஆசிரியர்களுக்கு அண்மையில் பாராட்டு வழங்கப்பட்டது. கல்வி சேவையில் நீண்ட கால அர்ப்பணிப்புடன் செயல்பட்ட இவர்களின் முயற்சிகள், பல தலைமுறைகளின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. நிகழ்ச்சியில் கல்வியாளர்களின் சேவையை நினைவுகூர்ந்து பாராட்டு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ் மொழி, பண்பாடு மற்றும் ஒழுக்க மதிப்புகளை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஆசிரியர்களின் […]
மலாக்கா மகிழ்வுலா

அயராது உழைக்கும் சங்க உறுப்பினர்களின் நலனை முன்னிறுத்தி அனைவரும் ஒன்றுகூடி மகிழ்வதற்கும் கற்பதற்கும் மலாக்காவிற்கு மகிழ்வுலா ஒன்றிற்கு சங்கச் செயலவையினர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆசிரியர் தினத்தின் வார இறுதியைத் தமிழாசிரிய நண்பர்களோடு மகிழ்ச்சியாகக் கொண்டாடவும் நினைவிலிருந்து நீங்கா அனுபவத்தைப் பெறவும் 2025 செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதி வரை சலுகைக் கட்டணத்தில் இப்பயணத்தைச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த மகிழ்வுலாவில் 13 உறுப்பினர்கள் கலந்துகொண்டு 3 நாள்களை மகிழ்ச்சியாகக் கழித்தனர்.
டிசம்பர் 2024-இல் நடைபெற்ற கல்வி மற்றும் பண்பாட்டு முகாம் பற்றிய பகிர்வரங்கு

2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் மற்றும் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் ஒருங்கிணைப்பில், மதுரை மற்றும் கொடைக்கானலுக்குக் கல்வி மற்றும் பண்பாட்டு முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடக்கநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், தமிழாசிரியர் பணித்திறன் மேம்பாட்டகத்தின் முதன்மை ஆசிரியர்கள் மற்றும் கல்வி அமைச்சின் பாடத்திட்ட வரைவு மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் என 29 ஆசிரியர்கள் இந்தக் கற்றல் முகாமில் கலந்துகொண்டனர். ஏழு நாள்கள் நடைபெற்ற இந்தக் கல்வி மற்றும் பண்பாட்டு […]
இணையவழிக் கருத்தரங்கு

மே 22-ஆம் தேதி, கல்வி அமைச்சின் மனிதவளப் பிரிவும் (Ministry of Education – HR Division), நான்கு ஆசிரியர் சங்கங்களும் இணைந்து சிறப்பான இணையவழிக் கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்தின. “Take Charge of Your Growth” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கு, ஆசிரியர்களின் தொழில் வளர்ச்சி மற்றும் தன்னம்பிக்கையை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது. இந்நிகழ்வு இணையவழியில் (Online) நடத்தப்பட்டதால், பல்வேறு இடங்களிலிருந்து ஆசிரியர்கள் எளிதாகப் பங்கேற்க முடிந்தது. சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்க உறுப்பினர்களும் இந்தக் […]
கல்வி மற்றும் பண்பாட்டு முகாம்

2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் மற்றும் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் ஒருங்கிணைப்பில் மதுரை மற்றும் கொடைக்கானலுக்குக் கல்வி மற்றும் பண்பாட்டு முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடக்கநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், தமிழாசிரியர் பணித்திறன் மேம்பாட்டகத்தின் முதன்மை ஆசிரியர்கள் மற்றும் கல்வி அமைச்சின் பாடத்திட்ட வரைவு மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் என 29 ஆசிரியர்கள் இந்தக் கற்றல் முகாமில் கலந்துகொண்டனர். ஏழு நாட்கள் நடந்தேறிய இந்தக் கல்வி மற்றும் பண்பாட்டு […]
சி.த.ஆ.ச. ஆசிரியர் தின விருந்து 2024

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் (STTU) ஏற்பாடு செய்த ஆசிரியர் தின விருந்து 2024, ஞாயிற்றுக்கிழமை 29 செப்டம்பர் 2024 அன்று மாலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை, Foochow Association, 21 Tyrwhitt Road, Singapore 207530 என்ற இடத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக (Guest of Honour) கல்வி அமைச்சகம் மற்றும் மனிதவள அமைச்சகத்தின் இணை அமைச்சர் (Minister of State) திருமதி Gan Siow Huang அவர்கள் […]
ஆற்றலின் கருவறை – தமிழ் வகுப்பறை

2024-ஆம் ஆண்டின் தமிழ்மொழி விழாவையொட்டிச் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்களின் நினைவுக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இக்கருத்தரங்கு ஏப்ரல் 20-ஆம் தேதி சனிக்கிழமையன்று உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் வளர்தமிழ் இயக்கம், கல்வி அமைச்சின் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழு ஆகியவற்றின் ஆதரவில் நடைபெற்றது. ‘ஆற்றலின் கருவறை – தமிழ் வகுப்பறை’ என்னும் கருப்பொருளில் அமைந்த இக்கருத்தரங்கின் நோக்கம் பேச்சுவழிக் கருத்துப்பரிமாற்றம், நடிப்பு, நாடகம் மற்றும் சமூக ஊடக உத்திமுறைகளைப் பயன்படுத்தித் தமிழ்மொழி கற்றல் […]